Belly danceஆல் வந்த விபரீதம்; கடையை மூடியது DBKL

கோலாலம்பூர்:

கடந்த வாரம் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன், ஆபாசமாக உடையணிந்து பெண்கள் நடனமாடும் (belly dance) வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) அக்கடையை மூட உத்தரவிட்டது.

DBKL தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில், அதன் அமலாக்கத் துறையானது ஆகஸ்ட் 23 அன்று குறித்த வளாகத்தில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறியது.

இருப்பினும், DBKL இன் பதிவின்படி, அந்த வணிக வளாகத்தில் நான்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் – இரண்டு வங்காளதேசிகள் மற்றும் இரண்டு ஈரானியர்கள் – செல்லுபடியாகும் பணி அனுமதி இல்லாமல் வேலை செய்தது கண்டறியப்பட்டது.

“எனவே, சரியான பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதற்கு அபராதமும், வியாபார உரிமத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டவை அல்லாத பிற செயல்பாடுகளைச் செய்ததற்காக மற்றுமொரு அபராதத்தையும் வெளியிட்டதாக DBKL அந்தப்பதிவில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here