1 வயது சிறுவன் மரணம் தொடர்பில் 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைது

புக்கிட் மெர்தாஜாமில்  துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்படும் ஒரு வயது சிறுவன் இறந்தது தொடர்பாக ஐந்து பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இரவு 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாக செபெராங் ஜெயா மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று சென்ட்ரல் செபெராங் பிறை காவல்துறை தலைவர் டான் செங் ஷான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரை 30 வயதுடைய ஒருவரால் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது சிறுவன் மயங்கி விழுந்துவிட்டதாகவும், சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனைக்குச் சொன்னார். இருப்பினும் அந்த நபர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேறினார் என்று அவர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து 16 முதல் 48 வயதுக்குட்பட்ட ஒன்பது சந்தேக நபர்கள் செபெராங் பிறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏசிபி டான் தெரிவித்தார். சந்தேகநபர்களில் ஒருவர் இதற்கு முன்னர் ஐந்து குற்றங்களுடன் குற்றப் பின்னணி கொண்டவர் என்றும் அவர் கூறினார். சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் விளக்கமறியலுக்காக  நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here