மூவார்:
நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த, சிம்பாங் ஜெராம் மற்றும் பூலாய் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு எளிய தேர்வு உள்ளது. அதாவது அவர்கள் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால் இது சாதகமாகும் என்று, UMNO உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
PH க்கு வாக்களிப்பது என்பது மக்களின் வாழ்வை மேம்பாடு அ டையவும் , உள்ளூர் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கவும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்க இலகுவானது என்று ஜோகூர் UMNO துணைத் தலைவருமான அவர் கூறினார்.
“சிம்பாங் ஜெராம் மாநில இருக்கை மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டும், எதிர்க்கட்சியின் கீழ் அல்ல; பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கும் இதுவே பொருந்தும். மாறாக பெரிகாத்தான் நேஷனல் (PN ) க்கு வாக்களிப்பது மக்களுக்கு எந்த நன்மையையும் தராது என்று அவர்,நேற்றிரவு தாமான் ஸ்ரீ காசியில் சிம்பாங் ஜெராமுக்கான PH வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மானுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமானாவின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபுவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.