ஜோர்ஜ் டவுன்:
கடந்த சனிக்கிழமை முதல் தெலுக் பகாங் நீரில் செந்நிறமாக மாறியுள்ளது தொடர்பில், பினாங்கு மீன்வளத் துறை குறித்த கடலில் உள்ள கடற்பாசிகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
குறித்த பகுதியில் நிலைமை பாதுகாப்பான நிலையை அடையும் வரை, கடற்பாசியின் அடர்த்தியை தமது நிறுவனம் கண்காணிக்கும் என்றும், அக்கடற்பாசியில் நச்ச்சுத்தன்மையோ அல்லது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த கூறுகளோ இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அந்த நீரில் phytoplankton cells மிக அதிக அடர்த்தியாக இருப்பதை உறுதிப்படுத்திய மீன்வளத்துறை, இதன் காரணமாக நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் மீன்கள் இறக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் பேராக்கின் கோலா குலாவில் இதே நிலை ஏற்பட்டதாக மீன்வளத்துறை தெளிவுபடுத்தியது.








