ஜோகூர் :
பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் சுஹைசான் கையாட்டின் வெற்றியை உறுதிச்செய்ய பெண் வாக்காளர்கள் தீர்க்கமான முடிவு எடுப்பவர்களாக இருக்க முடியும் என்று டிஏபியின் விளம்பரச் செயலாளர் தியோ நீ சிங் கூறினார்.
இது தொடர்பாக, தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சராகவும் இருக்கும் தியோ கூறுகையில், நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்களிப்பதில் பெண்கள் பங்கு முழு விழுக்காடு இருக்க வேண்டும் என்று, அவர் கூறினார்.
“பூலாயில் பெண் வாக்காளர்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அது கிட்டத்தட்ட 50 சதவிகிதம்… எனவே PH-BN மகளிர் அணிகள் ஒன்றிணைந்து அவர்களின் வாக்குகளை வெல்ல கடுமையாக உழைக்க வேண்டும்.
உதாரணமாக “வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்வது உண்மையில் மிகவும் உதவியாக உள்ளது, ஏனென்றால் வாக்காளர்களை வெற்றி பெறுவதற்கு பெண்கள் தங்கள் சொந்த உத்திகளைக் கொண்டுள்ளனர்,” என்று அவர் ஜோகூர் பாருவின் கெர்டாக் மேராவில் நடந்த ஜோகூர் PH மகளிர் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் கூறினார்.