இந்தாண்டிற்கான Mrs Malaysia World 2023 அழகியாக மகுடம் சூடினார் சிரம்பானின் வனிஷாந்தினி

கோலாலம்பூர்:

சிரம்பானச் சேர்ந்த 27 வயதான தொழிலதிபர் வனிஷாந்தினி M.M. பெல்லேரமேஸ், Mrs Malaysia World 2023 பட்டத்தை வென்றுள்ளார்.

ஒரு பல் மருத்துவரின் மனைவியான வனிஷாந்தினி, Mrs Malaysia World 2023 பட்டத்தை வென்றெடுத்ததன் மூலம் RM10,000 ரொக்கம், RM25,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் 21 வரை லாஸ் வேகாஸில் நடைபெறும் Mrs World போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொளவதற்கான, அனைத்துச் செலவுகளையும் அவர் பெற்றுக்கொள்வார்.

உலகின் திருமணமான பெண்களுக்கான Mrs World போட்டியில் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மற்ற பங்கேற்பாளர்களுடன் வனிஷாந்தினி போட்டியிடுவார் என்று Mrs Malaysia World இன் தேசிய இயக்குநரும் Mrs Malaysia World Sdn Bhd இன் நிர்வாக இயக்குநருமான டத்தின் ஹர்வீன் கோர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here