பிக் பாஸ் சீசன் 7 –இல் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல நடிகை பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கம்போலவே பிக் பாஸின் இந்த சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில் விஜய் டிவி அடுத்தடுத்து புரோமோக்களை வெளியிட்டு வருகிறது. கடந்த முறை அதிகம் பிரபலம் இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்பட்டதால் சுவாரசியம் சற்று குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சீசனில் பிரபலங்கள் பலரை களத்தில் இறக்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதுமைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியின் பாவனா, கிராமிய பாடகி ராஜலட்சுமி பெயர்களும் போட்டியாளர்கள் பட்டியலில் அடிபட்டது.மேலும் பிரபல நடிகை கிரண் பங்கேற்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இவர் ஜெமினி, வின்னர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார்.இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம் 2 சீரியல் புகழ் ரவீனா பிக்பாஸில் பங்கேற்பார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.




















