குவந்தான்:
கம்போங் பாடாங் ஜெயா 2ல் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒன்றில் நேற்று மதியம் சைக்கிள் ஓட்டிச் சென்ற எட்டு வயது சிறுவன் MPV வாகனத்தில் மோதி உயிரிழந்தான்.
கம்போங் பாடாங் தேசியப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முஹமட் அஸிம் இம்னி முகமட் பைசல் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என குவந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
நேற்று மாலை 6.45 மணியளவில் சம்பவம் நடந்ததாகவும் , 33 வயதான பெண் ஓட்டுநர் ஓட்டிச்சென்ற MPV வாகனத்தில், திடீரென்று சைக்கிளில் பயணித்த சிறுவன் மோதியதாகவும், விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு (HTAA) அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய அவர், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.









