கிள்ளான்:
மாதந்தோறும் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வாகன மற்ற நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கிள்ளான் லமான் செனி சஃபாரி வளாகத்தில் நடைபெற்றது.
செனாம் ரோபிக் (இசையுடன் உடற்பயிற்சி), மறுசுழற்சிப் பொருட்கள் சேகரிப்பு, புகைப்படப் போட்டி, அதிர்ஷடக் குலுக்கு, உள்ளூர் பழங்கள், காய்கறி, வியாபாரச் சந்தை, பல்வேறு போட்டிகள் என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய கிள்ளான் நக ராண்மைக் கழகத் தலைவர் நொராய்னி ரோஸ்லான், கிள்ளானை புகையற்ற நகர மாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் மாதம் ஒருமுறை சுமார் ஐந்து மணி நேரத் திற்கு வாகனமற்றப் பகுதியாக இப்பகுதியை உருவாக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதில் அனைத்து இனத் தவர்களுடன் வெளிநாட்டினரும் ஒற்றுமை உணர்வுடன் பங்கேற்பது பாராட்டுக் குரியது எனக் குறிப்பிட்டார்.
விரைவில் நாம் மாநகர் என்ற அந்தஸ்துக்கு உயர விருப்பதால் நாம் பல்வேறு மாற்றங் களுக்குத் தயாராக வேண்டும். இன்று அனைவரும் ’பாத்தேக்’ உடைகளை அணிந்து வந்திருப்பது நமது உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்குவதுடன் நம் நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
கிள்ளான் நகராண்மைக்கழகம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஜி எம் கிளாங் பேரங்காடி நிறுவனத்திற்கு நன்றி கூறிக் கொள்வதாகக் கூறிய அவர், இதுபோன்ற வாகனமற்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்கள் அனைவருக்கும் ஜி எம் கிளாங் நிறுவன இயக்குநர் ஃபூ லோக் பிங் பரிசுகள் எடுத்து வழங்கினார்.