கோலாலம்பூர்: எல்லை தாண்டிய காற்று மாசுபாடு தொடர்பான ஆசியான் ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பது தொடர்பாக மலேசியா இந்தோனேசியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாயன்று (அக் 3) ஆசியானில் உள்ள தனது சகாக்களுடன் எல்லைகடந்த காற்று மாசு பிரச்சினையைத் தீர்க்க ஒருங்கிணைக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள தனது கூட்டாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தோனேசியாவுக்கு நான் கடிதம் அனுப்பியுள்ளேன்.நேற்று பிரதமர் இந்த மூடுபனி பிரச்சினையை ஒருங்கிணைக்குமாறு அமைச்சுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
புதன்கிழமை (அக். 4) நடைபெற்ற அனைத்துலக பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் தயாரிப்புகள் மலேசியா (ஐஜிஇஎம்) கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அறிவுறுத்தலைப் பின்பற்றி, இந்தோனேசியாவில் உள்ள எனது துணைக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.
இன்று பிற்பகல் நிலவரப்படி ஸ்ரீ அமானில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் 138 ஆகவும், செரியான் சரவாக்கில் 113 ஆகவும் இருந்ததாக சுற்றுச்சூழல் துறையால் இயக்கப்படும் மலேசியன் காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு (APIMS) இணையதளம் தெரிவித்துள்ளது.