பணி முடிந்து இல்லம் திரும்பி கொண்டிருந்த டாக்டர் சந்தீப் சிங் விபத்தில் உயிரிழந்தார்

மலாக்கா மருத்துவமனையில் பணியை முடித்து வீட்டுக்குச் செல்லும் போது 41 வயதான மருத்துவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வியாழன் (அக். 5) காலை 9.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே டாக்டர் சந்தீப் சிங் பந்த்லியா உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் அடையாளம் காட்டினார்.

ஜாலான் க்ருபோங்கில் பாதிக்கப்பட்டவரின் கார் சறுக்கி லோரி மீது மோதியதாக அவர் கூறினார். விபத்து ஏற்பட்டபோது பாதிக்கப்பட்டவர் அலோர் காஜாவிலிருந்து கிளேபாங் பெசார் வரை ஓட்டிச் சென்றதாக ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் கூறினார். சாலையில் எதிர்புறத்தில் வந்த 57 வயதான லோரி ஓட்டுநரும் காயமடைந்துள்ளதாக அவர் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here