கோலா கெட்டிலில் நடந்த சாலை விபத்தில் பெண் மரணம்!

பாலிங்:

ஜாலான் கம்போங் புக்கிட் பாக் குனிங், கோலா கெட்டில் என்ற இடத்தில் இன்று ஏற்பட்ட ஒரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஃபரா நபிஹான் முகமட் (37) என்பவரே தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமட் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற புரோத்தோன் ஈஸ்வரா ஏரோபேக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்தபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“இந்த மோதலில் பாதிக்கப்பட்டவரின் கார் இரண்டாக உடைந்தது என்றும் பாதிக்கப்பட்டவர் சாலையின் இடது பக்கமாக வீசப்பட்டார்,” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மற்றைய வாகனத்தின் ஓட்டுநரும் அவரது 54 வயது பயணியும் லேசான காயமடைந்தனர்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here