பாலேக் புலாவ், பயான் லெபாஸில் சனிக்கிழமை (அக். 21) நடந்த ஒரு சம்பவத்தில், காவல்துறை அதிகாரியைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, காவல் துறையினரின் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படும் 63 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பாராட் டயா மாவட்ட காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்திய நபர் ஒருவர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அந்த இடத்திற்கு வந்ததும், அந்த நபரின் அடையாள அட்டையை காண்பிக்குமாறும், வாகனத்தை அகற்றுமாறும் காவல்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் உத்தரவிட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்று அறிக்கை கூறுகிறது.
காவல்துறை அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும், ஒரு அரசு ஊழியரை அவர்களின் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 170 மற்றும் பிரிவு 186 இன் கீழ் விசாரணைக்காக அந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சமூக காவல் (பந்துவான் போலீஸ்) அட்டையைப் பறிமுதல் செய்தனர்.









