பேராக், தம்புனில் உள்ள கந்தன் காய்கறி பண்ணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் உட்பட நான்கு உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்ற மூன்று பேர் பிஎஸ்எம் குழு உறுப்பினர் எம் கார்த்திகேஸ், பேராக் பிஎஸ்எம் இளைஞர் உறுப்பினர் பி கேசவன் மற்றும் ஹோ பொன் டீன் என அடையாளம் காணப்பட்ட விவசாயி ஆகியோர் ஆவர். மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான பேராக் மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை PSM கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ சிவராஜன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.










