தந்தை செய்த ஏடாகூடமான காரியத்தால் கடுப்பான எலான் மஸ்க்

எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க். இவருக்கு மே மஸ்க், ஹைடி என்ற இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான மே மஸ்க்குடன் இவருக்குப் பிறந்தவர்கள் தான் எலான் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டாஸ்கா மஸ்க். இவர்கள் திருமணமான 9 ஆண்டுகளில் பிரிந்தனர். பிறகு ஹைடி என்பவரை மணந்தார் எரோல். ஹைடி மூலம் எரோல் மஸ்குக்கு ஆஷா, அலெக்சாண்ட்ரா என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

ஹைடிக்கு எரோல் மஸ்கை மணப்பதற்கு முன்பே ஜனா என்ற மகள் இருந்தார். எரோல் மஸ்க்கிற்கும் ஹைடியின் மகளான ஜனாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவ்வளவு நாள் ரகசியமாக இருந்த அந்த செய்தி இப்போது வெளியில் வந்து பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

எரோல் மஸ்க் அளித்த ஒரு பேட்டியில், நாம் இந்த உலகில் வாழ ஒரே நோக்கம் இனப்பெருக்கம் செய்யத்தான் எனக் கூறியுள்ளார். மேலும் இச்செய்தியை எலான் மஸ்க் உள்ளிட்டோர் ஏற்க மறுப்பதாகவும் ஏன் என்றால் ஜனா அவர்களுக்குச் சகோதரி முறை எனவும் எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here