சிங்கப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த சின்னையா(வயது 26) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த சின்னையா, சாலையில் தனியாக நடந்துசென்ற மாணவியை இழுத்துச் சென்று கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சின்னையாவை கைது செய்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் கோர்ட்டு, சின்னையாவுக்கு 12 கசையடிகள் மற்றும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.