மருந்து எடுக்காமலேயே உடல் எடையை குறைக்கலாம் -அமெரிக்க மருத்துவர் பால் மாணிக்கம்

 

பெட்டாலிங் ஜெயா :

அன்றாட வாழ்க்கையில் எளிய நடைமுறைகளை கடைப்பிடித்தால் மட்டும் போதும். மருந்து எடுக்காமலேயே உடல் எடையை குறைக்கலாம். நோய்களிலிருந்தும் விடுபடலாம் என அமெரிக்கா, கலிபோர்னியாவைச் சேர்ந்த டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் (டாக்டர் பால் மாணிக்கம்) விளக்கமிளித்தார்.

டாக்டர் எஸ். விக்னேஸ்வரன், டாக்டர் எம். சுஜித் குமார் தலைமையிலான எஸ்.வி கேர் குழுமத்தின் ஏற்பாட்டில் ‘டாக்டர் பால் எடைக்குறைப்பு வழிகாட்டி’ நிகழ்ச்சி  இங்குள்ள மெனாரா டி.ஏ.சி ஆடிட்டோரியத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் விளம்பர ஆதரவாளராக மக்கள் ஓசை இடம்பெற்றிருந்தது.

மக்களுக்கு எளித்தாக புரியும் வண்ணம், நகைச்சுவை அம்சங்களுடன் தமது யூடியூப் பக்கத்தில் மருத்துவம், எடைக்குறைப்பு போன்ற விசயங்களை வழங்கிவரும் பிரபலமாக திகழ்பவரும் குடல்சார்ந்த மருத்துவ நிபுணருமான  டாக்டர் பால் மாணிக்கம். தாம் பகிர்ந்து வரும் ஆலோசனைகளை நேரடியாக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் ஓசை முகநூல் நேரலை வாயிலாகவும் குறிப்புகளை பகிர்ந்துகொண்டார்.

சூரியன் உதயமாகி 1 மணி நேரத்திற்கு பிறகும் சூரியன் மறைவதற்கு முன்னரும் நமக்கான உணவை எடுத்துவிடவேண்டும். அதற்கு பிறகு உள்ள இடைவெளியில் தண்ணீரைத் தவிர்த்து எந்த உணவையும் எடுக்கக்கூடாது. ஒரு நாளைக்கு கட்டாயம் 7 மணி நேரம் தூங்கியிருக்க வேண்டும். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் (கிட்னி பாதிப்பு உள்ளவர்கள்), இதய நோயாளிகள் தவிர்த்து அனைவரும் எவ்வளவு நீர் வேண்டுமானாலும் அருந்தலாம்.

இப்படி செய்து வரும் பட்சத்தில் உடல்  எடையை எந்த மருந்து மாத்திரையுமின்றி குறைத்துவிடலாம். அத்துடன் நோய்களிலிருந்தும் விடுபடலாம் என  விளக்கமளித்த அவர், தூங்குவதற்கு முன்னர் கைபேசி பார்த்துவிட்டு தூங்கக்கூடாது. அதன் கதிர்வீச்சுகள் உடலின் இயல்பு செயல்நிலையை பாதிக்கும் எனவும் தெளிவுபடுத்தினார்.

டாக்டர் பழனியப்பன் உரையாற்றியபோது

மருத்துவ கேள்வி பதில்கள், அதற்கான விளக்கங்கள் போன்ற சிறப்பு அங்கங்களும் இடம்பெற்ற வேளையில், மருத்துவர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here