கோலாலம்பூர்: சமூக ஊடக உள்ளடக்க வழங்குநரான ராது நாகா @ சைருல் எமா ரெனா அபு சாமா, திங்கள்கிழமை (அக் 31) புக்கிட் அமானில் தனது வாக்குமூலத்தைப் வழங்க வந்தபோது அவர் காவல்துறைக்கு ஒத்துழைக்கவில்லை என்று போலீஸ் படைத்தலைவர் கூறுகிறார். அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது… 33 கேள்விகள் கேட்கப்பட்டும் அவர் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை.
திங்கள்கிழமை பிற்பகுதியில் தொடர்பு கொண்ட போது, நாங்கள் அவரது கைபேசி மற்றும் சிம் கார்டையும் கைப்பற்றினோம் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார். சந்தேக நபர் ஒத்துழைக்கத் தவறியதால், வழக்கு தொடர்பான எந்தத் தகவலையும் போலீசார் பெறவில்லை என்றும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998ன் பிரிவு 249ன் கீழ் இது குற்றமாகும் என்றும் ரஸாருதீன் கூறினார்.
பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பதிவு தொடர்பாக தனது அறிக்கையை வழங்க சைருல் எமா ரெனா அழைக்கப்பட்டுள்ளார். புக்கிட் அமானின் இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிக்க சைருல் எமா தனது வழக்கறிஞர் ஜெய்த் மாலேக்குடன் வந்தார். அக்டோபர் 22 அன்று, பண்டார் துன் ரசாக் பிகேஆர், அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் வான் அசிஸாவுக்கு எதிராக அவதூறாகக் கருதப்படும் ஒரு இடுகையைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் மூன்று சமூக ஊடக பயனர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.








