விபத்தில் பலியானவரின் வாரிசுகளுக்கு பிடிபிடிஎன் (PTPTN) அனுதாபம் Simpan SSPN மூலம் கல்வி உதவி

விபத்தில் பலியானவரின் வாரிசுகளுக்கு ஆறுதல்

தேசிய உயர்கல்வி நிதி கழகம் (PTPTN) அதன் ஸியாரா காசே (Ziarah Kasih) திட்டத்தின் கீழ் பேராக், பத்து குராவ் பகுதியில் வசிக்கும் மறைந்த அமிருல் ஹஃபிஸ் ஓமாரின் வாரிசுகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது.

சிலாங்கூர், கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் ஏற்பட்ட சாலை விபத்தில் அமிருல் ஹஃபிஸ் உயிரிழந்தார்.

இந்தச் சந்திப்பில் PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம், கார்ப்பரேட் தொடர்பு, சந்தைப்படுத்தல் துறை தலைமை நிர்வாகி புவான் வான் ஸாவியா பிந்தி வான் அபு பக்கார், பேராக் மாநில PTPTN இயக்குநர் ஆண்டி நுராலி பின் முகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூகப் பொறுப்புணர்வுடன் நிதி உதவி

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் மூன்று குழந்தைகளுக்கு பிடிபிடிஎன் தனது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் தலா 1,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 3,000 ரிங்கிட் மதிப்பிலான Simpan SSPN Prime கணக்கு வைப்புத் தொகையை வழங்கியது. இது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

கல்விக்கான உறுதி

இது குறித்து கருத்து தெரிவித்த PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம், இந்த CSR முன்னெடுப்பு மூலம் வழங்கப்படும் பங்களிப்பு அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் வாரிசுகளின் நிதிச் சுமையை ஓரளவாவது குறைக்கும் என்று PTPTN நம்புகிறது.

ஒரு கணவர், தந்தையின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்றாலும் மறைந்தவரின் குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்படுவதையும் அவர்கள் மன உறுதியுடன் வாழ்க்கையைத் தொடரவும் இந்த உதவி ஓர் அர்த்தமுள்ள ஆதரவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

Simpan SSPN சிறப்பம்சங்கள்

உயர்கல்விக்காக நிதித் திட்டமிடலை மேற்கொள்ள சமூகத்தை ஊக்குவிக்கும் சிறந்த தளமாக சிம்பான் எஸ்எஸ்பிஎன் (Simpan SSPN) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வருமான வரி விலக்கு. வைப்பீட்டாளர்களுக்கு இலவச தக்காஃபுல்: பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலான இலவச ஊக்கத் தொகை, போட்டித்தன்மை வாய்ந்த லாப விகிதம், அரசாங்க உத்தரவாதம், ஷாரியா இணக்கம் போன்ற பல்வேறு நன்மைகள் மலேசியர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Simpan SSPN Plus தொகுப்புகள்

சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் (Simpan SSPN Plus) மாதத்திற்கு 50 ரிங்கிட் (Pakej Intan) முதல் 500 ரிங்கிட் (Pakej Berlian) வரையிலான ஆறு தொகுப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் வைப்பீட்டாளர்களுக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் வரையிலான தக்காஃபுல் பாதுகாப்பு, வைப்பீட்டாளர், துணைவர், குழந்தைகளுக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை, 69 வயது வரை தக்காஃபுல் பாதுகாப்பு போன்ற நன்மைகள் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன.

PTPTN-இன் அர்ப்பணிப்பு

உயர்கல்வி அமைச்சின் (KPT) கீழ் இயங்கும் ஒரு முகமையாக பிடிபிடிஎன் அதன் முழக்கமான ‘உங்கள் வெற்றிக்கான வாய்ப்பு’ (PTPTN Peluang Kejayaan Anda), அதன் தாரக மந்திரமான ‘பிடிபிடிஎன் அக்கறை: நாங்கள் பகிர்கிறோம், தாங்கள்’ (PTPTN Prihatin; Kami Kongsi, Kami Bantu) என்பதற்கு ஏற்ப கல்வி சார்ந்த சிஎஸ்ஆர் (CSR) திட்டங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும்.

கூடுதல் தகவல்கள்

Simpan SSPN குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.ptptn.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் அல்லது எளிதான, வேகமான, பாதுகாப்பான சேவைக்கு myPTPTN செயலியைப் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here