மலாக்கா :
50 வயது பெண்ணை மானபங்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில், ஆயிர் கேரோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
82 வயதான லியாங் சிங் குப் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதி கைருன்னிசாக் ஹஸ்னி முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் பண்டார் ஹிலிரில் உள்ள ஜாலான் மெர்டேக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள அலுவலகத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளைத் தழுவி, அவரைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இது குற்றவியல் சட்டம் பிரிவு 354 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது சவுக்கடி அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கலாம்.
இவ்வழக்கில் நீதிமன்றம் ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் லியாங்கிற்கு RM3,000 ஜாமீன் வழங்கியது மற்றும் டிசம்பர் 7 ஆம் தேதியை அடுத்த தவணையாக நிர்ணயித்தது.























