ஜப்பான் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

‘ஜப்பான்’ திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தின் டிரைலர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வெளியிட்ட சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர் களைக் கடந்து சாதனை படைத்தது. மேலும் உலகெங்கும் ரசிகர்களால் அதிகம் எதிர் பார்க்கப்படும் திரைப்படமாக ஜப்பான் இணையதளங்களில் பலமான விமர் சனங்களை அள்ளுகின்றது.

இந்நிலையில் ஜப்பான் படத்திற்கு மத்திய தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி யுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறி வித்துள்ளது.

வரும் நவம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப்படவிருக்கும் ஜப்பான்  திரைப் படத்தை சாரதா சிவலிங்கம் கலை இயக்குநர்களின் நிறுவனங்களான மலேசியாவின் MSK Cinemas Sdn Bhd  நிறுவனமும் இந்தியாவின் MSK Film Production PVT. LTD நிறு வனமும் இணைந்து வெளியிடுகின்றன.

 MSK-இன் திரைப்படத் தேர்வுகள் அனைத்தும் மலேசிய ஜப்பான் நிச்சயமாக திரை யரங்குகளை அதிர வைப்பான் ரசிகர்களின் விருப்பத்தையும் பொழுது போக்கையும் சார்ந்திருப்பதால் இத்திரைப்படமும் மிகப்பெரும் ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. வெற்றியும் பெறும். அண்மையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் MSK Film Production PVT. LTD சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைத் தேர்வு செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறது.

இப்படம் நிச்சயம் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நல்ல ஒரு தீபாவளிப் பரிசாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங் களுமே கார்த்திக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.

இதையடுத்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அவருக்கு மேலும் கைகொடுத்தது. இதனால் ஜப்பான் படமும் மாபெரும் வெற்றியைக் குவிக்கும் என்பது ரசிகர்கள் மேலும் திரைப்படக் குழுவினரின் கணிப்பாக இருக் கிறது. க்ரைம் த்ரில்லர் கலந்த ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் எனவும் இதனால் ஜப்பான் படத்தின் பட்ஜெட் எதிர் பார்த்ததை விட அதிகமாகியுள்ளது எனவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here