ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றினால் ஒரு பில்லியன் டாலர் கொடுக்க தயார்; சவால் விடுத்த எலான் மஸ்க்

சோசியல் மீடியா உலகில் எப்போதுமே பரபரப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. அதுவும் பிரபல தொழிலதிபரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இவர் கூறும் கிண்டல்களும், சர்ச்சைப் பேச்சுகளும் வழக்கத்திற்கு மாறான யோசனைகளும் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம் பிடிப்பவை. ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக வாங்கி, அதன் பெயரை X என மாற்றிய கதையெல்லாம் உலகமே அறியும்.

இந்த முறை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே பல பஞ்சாயத்துகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மாற்றினால் மார்க் சக்கர்பெர்க்கிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக உறுதி அழித்துள்ளார் எலான் மஸ்க். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு குறித்து முதலில் பகடியான செய்திகளை வெளியிடும் பாபிலோன் பீ (BabylonBee) என்ற தளம்தான் வெளியிடிருந்தது.

இது உண்மைதான் என உறுதி செய்துள்ள மஸ்க், ‘ஃபேஸ்பூப்’ என பெயர் வைத்தால் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் இரண்டு பெரும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு இடையே வார்த்தை போர்கள் ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here