மடானி திட்டத்தின் 100 ரிங்கிட் இ-வாலட் டிசம்பர் 4 முதல் வழங்கப்படும்; பிரதமர்

 ஆண்டுக்கு RM100,000 க்கும் குறைவாக சம்பாதிக்கும் 21 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மலேசியர்களுக்கு RM100 இ-வாலட் டாப் அப்களை வழங்கும் இ-மடானி திட்டம் வழி திங்கள்கிழமை (டிசம்பர் 4) முதல் அத்தொகை வழங்கப்படும். மலேசியாகினியின் படி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிப்ரவரி 20, 2024 வரை இ-வாலட்  பயன்படுத்த முடியும் என்று கூறினார்.

இந்த முயற்சியில் நான்கு இ-வாலட் தளங்கள் பங்கேற்கும். இருப்பினும் அவை பிரதமரால் இன்னும் வெளியிடப்படவில்லை. இ-வாலட் டாப்-அப் மூலம் 10 மில்லியன் மலேசியர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்கு RM1 பில்லியன் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அன்வார் கூறினார்.

இன்று மக்களவையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்புக்கான அன்வார் சமர்ப்பித்த போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற முன்னேற்றங்களில், RM2,400 வரையிலான மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கான தள்ளுபடி விண்ணப்பங்களும் டிசம்பரில் திறக்கப்படும். இந்த தள்ளுபடியானது மாதந்தோறும் RM120,000க்கும் குறைவான வருமானம் ஈட்டும் மலேசியர்களுக்குப் பொருந்தும். மேலும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்ல ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here