PEDi நிர்வாகிகள், துணை நிர்வாகிகளுக்கு 500 ரிங்கிட் சம்பள உயர்வு

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிஜிட்டல் பொருளாதார மைய (PEDi) நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிகளுக்கான சம்பளம் 500 ரிங்கிட்டால் அதிகரிக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தது நியாயமானது, மேலும் அவர்கள் முன்னேறுவதற்கு இது ஊக்கம் மற்றும் உந்துதலாக இருக்கும் என்று தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட இந்த சம்பள உயர்வு, நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு முயற்சியை அங்கீகரிப்பதில் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தது.

இது சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து PEDi நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாகிளுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என்றும் கூறிய அவர், பிரதமரின் இந்த அறிவிப்பு அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு ஒரு சான்று என்றார்.

ஜனவரி 2024 முதல், PEDi நிர்வாகிகளுக்கான சம்பளம் RM2,000 இலிருந்து RM2,500 ஆகவும், துணை நிர்வாகிகளுக்கு தற்போதைய RM1,500 இலிருந்து RM2,000 ஆகவும் உயர்த்தப்படும் என்று PEDI MADANI 2023 நிகழ்வில் அன்வார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here