MRT ரயிலில் வெடிப்பு / தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான பதிவு உண்மையல்ல – Rapid KL

கோலாலம்பூர்:

நேற்று மதியம் காஜாங் வழித்தடத்தில் Mass Rail Transit (MRT) ரயிலில் வெடிப்பு அல்லது தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான வைரல் பதிவை Rapid KL நிறுவனம் மறுத்துள்ளது.

Rapid KL இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் ரயில் எண் ’28’ இலிருந்து தீப்பொறி சத்தம் மட்டுமே சம்பந்தப்பட்டதாகத் தெரிவித்தது, இதனால் அருகிலுள்ள ரயில் நிலையத்தில் உள்ள MRT டிராக் மின்சார விநியோக அமைப்பின் அலாரத்தை அடிக்கச்செய்ததால், Taman Mutiara ரயில் நிலையத்தில் குறித்தி MRY ரயில் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் ‘தீப்பொறி ஒலி’யை மட்டுமே ஏற்படுத்தியது அல்லது உருவாக்கியது. எனினும், வெடிவிபத்து அல்லது தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என அது தெளிவு படுத்தியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த ரயில் சேவையில் இருந்து நீக்கப்பட்டது என்றும் பயணிகள் Taman Mutiara விலிருந்து அடுத்த ரயிலில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்றும், சம்பந்தப்பட்ட ரயில் பின்னர் விரிவான ஆய்வுக்காக இயக்க நேரங்களுக்குப் பிறகு டிப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது காஜாங் பாதையில் எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here