மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. பிலிப்பைன்சில் உள்ள மிண்டானா நகர் அருகே நிலநடுக்கம் பதிவானது. இதனால் அங்குள்ள பகுதிகள் அதிர்ந்தன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: முன்னதாக இந்தோனேசியாவின் கெபுலாவான் பாபர் பகுதியில் இன்று பிற்பகலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்து வெளியிட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியதால் முதலில் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் ஒரு சில இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்னவென்றால் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் தான்.
10 ஆயிரம் பேர் பலி: கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி தெற்காசிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த நிலையில் தான் தற்போது டிசம்பர் 1ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, ஜப்பான், மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது போல மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும் அப்போது உள்ளபடி தற்போது மிகப்பெரிய அளவில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.