சென்னை:
சென்னையில் மிச்சாங் புயலால் கனமழை பெய்துவருகிறது. இவ்வேளையில், ‘ராட்சத’ முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
‘மக்கர்’ வகையைச் சேர்ந்த அந்த முதலை சாலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு வனத் துறை பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளது.‘மக்கர்’ வகை முதலை மிகப் பெரிய உடலைக் கொண்டிருக்கும். அதன் வாய்ப்பகுதி சிறிதாக இருக்கும்.
சன் நியூஸ் தொலைக்காட்சி எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய காணொளியை தமிழ்நாடு அரசாங்கத்தின் கூடுதல் துணைச் செயலாளர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார். வேலம் மாள் நியூ ஜென் பள்ளிக்கு அருகே திங்கட்கிழமை டிச. 4 காலை அந்த முதலை சாலை யைக் கடப்பது அக்காணொளியில் தெரிகிறது.
அவ்வழியே காரில் சென்ற ஒருவர் அதனைப் படம் பிடித்துள்ளார். மிச்சாங் புயலால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்ததில் அந்த முதலை வெளியே வந்திருக்கக்கூடும் என்று சுப்ரியா கூறியுள்ளார்.
சென்னை நீர் நிலைகளில் மிகச் சில ‘மக்கர்’ முதலைகள் மட்டுமே உள்ளன. பொது வாகவே அவை கூச்சப்படும் இயல்புடையவை. மனிதர்களிடம் நெருங்க அவை விரும் பமாட்டா. எனவே பீதியுற வேண்டாம். அவற்றைச் சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால் அந்த முதலைகளால் மனிதர்களுக்கு எந்த வகையிலும் தீங்கு ஏற் படாது. வனத்துறையினருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது, என்று எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.