இந்த விளம்பரம் தேவையா? உதவிக்கரம் நீட்டிய நயன்தாராவுக்கு கடுமையான எதிர்ப்பு!

சென்னை:

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை நயன்தாரா உதவிக்கரம் நீட்டி யுள்ளார். அந்த வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், இதற்கு நெட்டிசன்கள் அவரைத் திட்டி தீர்த்து வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் கடந்த சில நாட்களாக சென்னையைப் புரட்டிப் போட்டுள்ளது. நடி கர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், பாலா, அமுதவாணன், கலா மாஸ்டர் எனப் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார். நடிப்பு, தயாரிப்பு மட்டுமல்லாது பல பிசினஸ்களிலும் முதலீடு செய் துள்ளார் நயன்தாரா. டீ பிசினஸ், ஸ்கின் கேர், ரியல் எஸ்டேட், உணவு என நீளும் இந்தப் பட்டியலில் சமீபத்தில் ‘ஃபெமி 9’ எனப் பெயரிடப்பட்டுள்ள நாப்கின் பிசின ஸில் நயன்தாரா முதலீடு செய்திருப்பதாக கடந்த விஜயதசமி அன்று தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அறிவித்தார்.

இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள கைவேலி பிரிட்ஜில் புயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணவுப் பொட்டலம், வாட்டர் பாட்டிலோடு சேர்த்து இந்த ‘ஃபெமி 9’ நாப்கினையும் கொடுத்துள்ளார் நயன்தாரா. இந்த வீடியோவின் இறுதியில் இந்த நாப்கினை வாங்கியுள்ள பெண்கள் நயன்தாராவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதற்குதான் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். ’இதுபோன்ற கடினமான சூழ்நிலை யில் உங்கள் பிராண்ட்டினை விளம்பரப்படுத்துவது சரியல்ல’ எனவும் ‘மிகவும் மலிவான விளம்பர உத்தி’ எனவும் கமெண்டில் திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here