சபாவுக்கு கோழி, அரிசி மானியங்கள்: உறுதியளித்தார் பிரதமர்

நேற்று பெனம்பாங்கில் பேசிய அன்வார், இரண்டு முக்கிய பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதாகச் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.

எனவே, இதை நாம் சரியாகக் கையாள வேண்டும் என்று முடிவு செய்தேன். விலைகள் உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக இருந்தால் அதை சரிசெய்ய மானியம் வழங்கப் படும் என்கிறார் பிரதமர்.

முன்னதாக, அன்வார் தலைமையிலான நிர்வாகம் நவம்பர் 1 முதல் கோழிக்கு (கிலோ ஒன்றுக்கு ரிம 9.40) எதிரான விலைக் கட்டுப்பாடுகளை அகற்றியது. இதன் காரண மாக மலேசிய தீபகற்பத்தில் விலை சற்று குறைந்துள்ளது.

பெடரல் அக்ரிகல்சுரல் மார்கெட்டிங் அத்தாரிட்டி (Fama) இணையதளத்தின்படி, டிச.7 அன்று தீர்மானிக்கப்பட்ட கோழியின் தரமான சில்லறை விலை கோலாலம்பூரில் ஒரு கிலோவுக்கு ரிம9.40 ஆகவும், சபாவில் ரிம10.75 ஆகவும் சரவாக்கில் ரிம10.80 ஆகவும் இருந்தது.

அரிசியைப் பொறுத்தவரை, புத்ராஜெயா, சபா மற்றும் சரவாக்கிற்கான இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரிம 950 மானியத்தை அக்டோபர் 5 முதல் அறிமுகப்படுத்தியது.

சபா மற்றும் சரவாக்கில் வாழ்க்கைச் செலவுத் துயரங்களைக் கையாள்வதற்கான ஒரு சிறப்புக் குழுவின் தலைவராகத் துணைப் பிரதமர் II ஃபதில்லா யூசோப் பணிக்கப்பட்டுள்ளார் என்று அன்வார் கூறினார்.

இதற்கிடையில், ஏழைகளுக்கு உதவவும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தனது நிர்வாகம் ஊதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்றும் அன்வார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here