சென்னை:
தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம். அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது.
இதில் தேமுதிக இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட் டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் அமமுகவுடனும் தேமுதிக கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து தேமுதிக எந்த பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தது.இந்த நிலையில் தான் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில் இப்போது பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமல தாவை ஒருமனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டு உள் ளது. பிரேமலதா கையை தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.
தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம். அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் பிரேமலதாதான் இனி மேல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பார். ஆனால் அவர் பொதுவாக இறங்கி போகும் இயல்பு கொண்டவர் இல்லை. அதிக இடங்களை கேட்பார். அந்த இடங்களை கொடுக்கும் வரை வாதம் செய்வார். அரசியலில் கட்சிகள் இறங்கி செல்லும் . ஆனால் பிரேமலதா அப்படி இறங்கி செல்லும் வழக்கம் கொண்டவர் கிடையாது.
அவர் கேட்ட இடங்களில் விடாப்பிடியாக இருப்பார். அதனால் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதே கடினம் என்ற நிலை அதிமுக , திமுகவிற்கு இருக்கும். ஏற்கனவே பிரே மலதா உடன் பேச்சுவார்த்தையில் எடப்பாடிக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள் ளது. அதேபோல் துரைமுருகனுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. இதனால் திமுக, அதிமுக இரண்டும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதை பெரிதும் விரும்பாது.
அதோடு தேமுதிக வாக்கு வங்கியும் கடந்த தேர்தல்களில் 5 சதவிகிதம் என்பதில் இருந்து குறைந்து 1 சதவிகிதம் வரை வந்துள்ளது. தேமுதிகவின் முகமே விஜயகாந்த் தான் . அவரே கட்சியில் இருந்து ஓரம்கப்பட்டுவிட்டார். அப்படி இருக்க. அவர் இல்லா மல் தேமுதிக எப்படி இடங்களை வெல்ல முடியும், பிரச்சாரம் செய்ய முடியும். அத னால் இனி தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.









