ஈப்போ தாமான் மேன்ஷனில் வீடு புகுந்து கொள்ளையடித்ததில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரைக் கண்டுபிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். ஈப்போ காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் யஹாயா ஹாசன் கூறுகையில், 28 வயது தொழிலதிபரான பாதிக்கப்பட்டவரிடமிருந்து 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை இருவரும் வண்டியில் கொண்டு சென்றதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரிடம் ஆடம்பரமான கடிகாரங்கள், நகைகள், மொபைல் போன்கள் மற்றும் இரண்டு மடிக்கணினிகள் உட்பட பல்வேறு உடமைகள் திருடப்பட்டுள்ளன. சந்தேக நபர்களால் விலையுர்ந்த கைக்கடிகாரங்களில் RM80,000 மற்றும் RM200,000 விலையுள்ள பல IWC Schaffhausen கைக்கடிகாரங்களும் சுமார் RM230,000 மதிப்புள்ள ரோலக்ஸ் ஒன்றும் அடங்கும்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கண்டறிய நாங்கள் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் சனிக்கிழமை (டிச. 23) அறிக்கையில் தெரிவித்தார். இது தொடர்பாக டிசம்பர் 12ஆம் தேதி புகார் தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஏசிபி யஹாயா, இருவரைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற போலீசார் நம்புவதாகக் கூறினார். மேலும் தகவல் தெரிந்த பொதுமக்கள் யாராவது முன்வருமாறு கேட்டுக் கொண்டார். தகவல் தெரிந்தவர்கள், 013-628 2176 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி அல்லது 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 05-254 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.















