சாலையில் கிடந்த மாட்டில் மோதி மூன்று வாகனங்கள் விபத்து!

கோத்தா திங்கி:

இன்று அதிகாலை பண்டார் தெங்கராவில் உள்ள ஜாலான் இனாஸில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த மாட்டின் மீது மோதி மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

இருள் காரணமாக சாலையில் நின்ற பசுவை கவனிக்காமல், அதன் மீது மோதியதால், அதிகாலை 12.33 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முகமட் நோருல் ஃபசுதின் ஷாஃபி தெரிவித்தார்.

இவ்விபத்தில் புரோத்தோன் வீராவில் இருந்த 57 வயதுடையவர் மற்றும் தோயோத்தா எஸ்இஜியில் இருந்த 25 வயது நபர் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகினர், ஏனைய வாகன ஓட்டிகள் காயமடையவில்லை. ஆனால் அதில் வீரா கார் டிரைவர் மோதியதில் துரதிஷ்டவசமாக மாடு பலியானது.

காயமடைந்த ஓட்டுநர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், நள்ளிரவு 1.10 மணிக்கு மாட்டின் சடலம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது என்று நோருல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here