கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின் உடல் மீட்பு

அலோர் காஜாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண்ணின் உடல், பூலாவ் செனாங்கின் கம்போங் ரிமாவ், அலோர் காஜா – தம்பின் டிரங்க் சாலையில் உள்ள சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.

அலோர் காஜா காவல்துறைத் தலைவர் அர்ஷத் அபு கூறுகையில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் தலை மற்றும் இரண்டு கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில், பொதுமக்களால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று ஒரு அறிக்கையில், அர்ஷத், சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது சிதைந்த நிலையில் இருந்ததாகவும் அந்தப் பெண் இறந்து 7 முதல் 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் கூறினார். போலீசாரிடம் எந்த அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. மரணத்திற்கான காரணத்தை கண்டறியவும், அடையாளம் காணவும் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

கடந்த மாதத்தில் இரண்டு காணாமல் போன வழக்குகளில் போலீசார் டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் (DNA) சோதனைகளை நடத்தியதாகவும், ஆனால் முடிவுகள் எதிர்மறையாக இருப்பதாக அர்ஷாத் கூறினார்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அலோர் காஜா காவல்துறை தலைமையகத்தை O6-5562222 அல்லது மூத்த விசாரணை அதிகாரி அலி ஹனாஃபியா ஹாசிம் 019-9536277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here