5ஆம் படிவ மாணவி கடத்தல் தொடர்பில் 3 பேர் கைது

SMK Kepongஇல்  கடந்த வெள்ளிக்கிழமை  மாணவி கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட 3 பேர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவரின் 42 வயதுடைய தாயாருக்கு ஆசிரியரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு புகார் கிடைத்ததாக கோம்பாக் போலீஸ் தலைவர் நூர் அரிபின் நசீர் தெரிவித்தார்.

 5ஆம் படிவ மாணவியை ஒரு ஆணும் பெண்ணும் காரில் கடத்திச் சென்றனர்  என்று அவர் கூறியதாக சினார் ஹரியான் அறிக்கை தெரிவித்தது. கடத்தல் குற்றவியல் சட்டப்பிரிவு 365இன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகநபர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றியதாக அரிஃபின் கூறினார்.

தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரி யாப் சிங் சுவாவை 019 9969649 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை நடவடிக்கை அறை 03 61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here