கோலாலம்பூர்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரு மாநிலங்களிலும் உள்ள 43 நிவாரண மையங்களில் மொத்தம் 1,516 குடும்பங்களைச் சேர்ந்த 5,428 பேர் தங்கியுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, ஜோகூரில் 6 மாவட்டங்களில் இயங்கிவரும் 34 நிவாரண மையங்களில் மொத்தம் 4,648 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பகாங்கிலுள்ள மூன்று மாவட்டங்களில் இயங்கிவரும் 9 நிவாரண மையங்களில் நேற்றிரவு 780 பேர் பேர் தங்கியுள்ளனர்.
மேலும் சரவாக்கின் கூச்சிங்கில், தீ விபத்தில் தமது வீடுகளை இழந்துள்ள 38 பேர் அங்குள்ள ஒரு நிவாரண மையத்தில் இன்னமும் தங்கியுள்ளனர்.