கிள்ளான்:
14 வயது ஊனமுற்ற சிறுமியை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த தம்பதிக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமியின் உடலைத் தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக டிசம்பர் 8 ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்ட கைருல் ஹிஸ்வான் கமாருடின், 33, மற்றும் நோரேஹான் அபு காசிம், 36, ஆகியோருக்கு சிறைத்தண்டனையை நேற்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோரிடா ஆடாம் வழங்கினார்.

மேலும், சிறுமியை உடலுறவில் ஈடுபட வைத்ததற்காக தம்பதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்தோடு கைருல் ஹிஸ்வான் தனது கைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததற்காக ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரே நேரத்தில் சிறைத் தண்டனைகளை அனுபவிக்க நீ திபதி நோரிடா உத்தரவிட்டார்.
நவம்பர் 12 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கோலா லங்காட்டின் கம்போங் புக்கிட் சாங்காங்கில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் அனைத்து குற்றங்களையும் செய்தனர்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) மற்றும் 15(d) ஆகியவற்றின் கீழ் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆபாச வீடியோக்களை வைத்திருந்த குற்றத்தில், கைருல் ஹிஸ்வான் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 292 (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கின் உண்மைகளின்படி, தம்பதியினர் சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, துணிகளை மடிக்கும் வேலைக்கு உதவ தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். அவர் வீட்டுக்கு வந்ததும், பின்னர் படுக்கையறையில் துணிகளை மடித்து வைக்கச் சொன்னார்கள். பின்னர் மேற்கூறப்பட்ட குற்றங்களை செய்தார்கள் என கூறப்படுகிறது.









