விரைவுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதல்; இருவர் பலி

ரந்தாவ் பஞ்சாங்:

ஜாலான் பாசீர் மாஸ்-ரந்தாவ் பஞ்சாங்கின் கம்போங் கெர்டக் அனாக் புவாயா அருகே விரைவுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 4.57 மணியளவில் நடந்த விபத்தில், ஹோண்டா அக்கார் வகை காரில் பயணித்த நூருல் சுஹைலா முகமட் உத்மான் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், கார் ஓட்டுநர் முகமட் தர்மிசி அப்துல் ஜமீல் (28) பலத்த காயம் அடைந்தார் என்றும் ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தின் தலைவர் ஷபாவி ஸ்டாபா கூறினார்.

உயிரிழந்த மற்றொருவர் பேருந்து ஓட்டுநராவார், அதே நேரத்தில் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் தொடை உடைந்து, மேல் சிகிச்சைக்காக பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றார் அவர்.

“மேலும், பேருந்தில் ஐந்து பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“விபத்துக்குள்ளான பேருந்து ரந்தாவ் பஞ்சாங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், கார் எதிர் திசையில் பாசீர் மாஸ் நோக்கிச் சென்றது” என்றும் நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here