கிள்ளான்:
KLIA ஏரோட்ரெய்ன் திட்டத்தில் அரசாங்கம் தலையிடவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் நேரடியாக அரசாங்க அதிகார வரம்பிற்குள் வராது, மாறாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (MAHB) மூலம் நிர்வகிக்கப்படுகிறது என்று லோக் கூறினார்.
“முழு ஒப்பந்தமும் MAHB இன் கீழ் உள்ளது. நிச்சயமாக, அவர்கள் (MAHB) போக்குவரத்து அமைச்சருக்கு அறிக்கை செய்கிறார்கள். இருப்பினும், ஒப்பந்தத்தின் ஆலோசனை மற்றும் வழங்கல் முற்றிலும் MAHB இயக்குநர்கள் குழுவின் கீழ் உள்ளது என்றார் அவர்.
“அத்தோடு இயக்குநர் குழுவில் எங்கள் பிரதிநிதி, அதாவது போக்குவரத்து அமைச்சகத்தின் துணைப் பொதுச்செயலாளர் இருந்தாலும், போக்குவரத்து அமைச்சரிடமிருந்து நேரடியாக ஒப்பந்தத்தை வழங்குவதில் எந்த குறுக்கீடும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 9 நிலையங்களை கேடிஎம்பி மேம்படுத்தவுள்ளது என்றும், அதே வேளையில் சிரம்பானில் புதிய நிலையம் ஒன்றும் கட்டப்படவுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.









