சாரா உதவித்தொகை RM600 இல் இருந்து RM1,200 ஆக உயர்த்தப்படும்- பிரதமர்

பெட்டாலிங் ஜெயா:

ஏழைக் குடும்பங்களுக்கான Sumbangan Asas Rahmah (சாரா) பண உதவித்தொகை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட RM600 இல் இருந்து, இந்த ஆண்டு RM1,200 ஆக இரு மடங்காக உயர்த்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த RM600 அதிகரிப்பு மூலம் 700,000 க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெறுநர்களுக்கு RM700 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இது அவர்களின் வாழ்க்கை செலவீனத்தை குறைக்க சிறுது பங்காற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

“மலேசியாவின் பொருளாதார மாற்றம் மக்களை உயர்த்துவதில் இருந்து தொடங்குகிறது என்று கூறிய பிரதமர், விரிவுபடுத்தப்பட்ட சாரா திட்டம் மடானி பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப முயற்சியாகும்” என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாரா உதவித்தொகை சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய இடங்களுக்கு பிப்ரவரி 19 முதலும், தீபகற்ப மலேசியாவிற்கு ஜனவரி 22 முதலும் தகுதியுள்ள பெறுநர்களின் வான்ஹகி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here