குவான்டானாமோ பே:
அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி தீவில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றத்தை இரு மலேசியர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கு 20லிருந்து 25 ஆண்டுகள் வரையிலான தண்டனை விதிக்கும்படி இவர்களுக்கு எதிரான வழக்கில் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட நீதித் துறை குழுவிடம் இவ்வாரம் கேட்டுக்கொள்ளப்படும்.
எனினும், திரைமறைவில் முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் அதிகாரியுடன் ஏற்பட்ட இரகசிய ஒப்பந்தத்தின்கீழ், இவ்விருவரும் இவ்வாண்டு இறுதிக்குள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களுக்கு எதிரான தண்டனை விதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை மற்ற நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் வழி தீர்ப்பது என்பது அமெரிக்க அரசின் உத்தியாக இருக்கிறது என செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் 2003ஆம் ஆண்டு பிடிபட்டதிலிருந்து பல்லாண்டு காலம் அமெரிக்க மத்திய உளவுத் துறையின்கீழ் உள்ள ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் விவகாரத்தில் மலேசியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இவர்களுக்கு எதிரான நீண்ட வழக்கு விசாரணையை அமெரிக்கா தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.