தற்போதுள்ள அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம் இல்லை- நிதியமைச்சகம்

புத்ராஜெயா:

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் தற்போது அமல்படுத்தப்படவுள்ள பொது சேவை ஊதிய முறையால் (SSPA) பாதிக்கப்பட மாட்டார்கள் என்று டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு எப்போதும் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று, இன்று வெள்ளிக்கிழமை (ஜன. 26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இரண்டாவது நிதியமைச்சர் (II) இதனைக் கூறினார்.

முன்னதாக, வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்குப் பிறகு அரசு பதவிக்கு நியமிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

அதாவது வரும் பிப்ரவரி 1க்குப் பிறகு பணியமர்த்தப்படும் எந்த அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்காது என்றும், அதே கொள்கை அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும் பிரதமர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here