எரிந்த தடயங்களுடன் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு – போலீஸ் விசாரணை ஆரம்பம்

கலாபக்கான்:

இன்று காலை புக்கிட் டுகோக்கில், பண்ணை அருகேயுள்ள சாலையோரத்தில் எரிந்த நிலையில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த எலும்புக்கூடு ஒன்று அப்பகுதி வழியாக சென்ற குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 9.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று
தாவாவ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.

இருப்பினும், இதுவரை பாதிக்கப்பட்டவரின் பாலினம் உட்பட வேறு எந்த அடையாளமும் தெரியவில்லை என்றும், எலும்புக்கூடு மேல் நடவடிக்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இதுவரை இந்த வழக்கு திடீர் மரண என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் பிரேத பரிசோதனையின் படி அது வேறு கோணத்தில் விசாரணை செய்யப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வருமாறும், விசாரணைக்கு உதவுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களிலும் செய்தி வைரலானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here