நாட்டின் திவால் நிலையைத் தவிர்க்க ஓய்வூதியம் அல்லாத திட்டம் தேவை என்கிறார் பிரதமர்

புதிய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் திட்டம், அரசுப் பணியில் பெரும்பான்மையாக உள்ள மலாய்க்காரர்களை பலிவாங்கும் என்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், நாடு திவாலாகும் அபாயத்தையும் எதிர்கால சந்ததியினர் பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் தவிர்க்க புதிய சேவைத் திட்டம் தேவைப்படுவதால் இந்த திட்டம் நீண்ட காலமாக ஆய்வுக்கு உட்பட்டது என்றார்.

சரியாக கூறவேண்டுமானால்  90 களில் இருந்து, இது பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்த அரசியல் காரணங்களுக்காக விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓய்வூதியத்தை ரத்து செய்வது மலாய்க்காரர்களை பலிகடா ஆக்கும் என்றும், இது டிஏபி முன்மொழிவு என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மைகளை முன்வைக்கவில்லை. மாறாக மத உணர்வுகளில் விளையாடுகின்றனர் என்று பேராக் ஒற்றுமை அரசாங்க மாநாட்டை இன்று நிறைவு செய்யும் போது அவர் கூறினார்.

சில வளர்ந்த நாடுகள் ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டதாக அன்வார் கூறினார். புதிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத திட்டத்தை அமல்படுத்தினால் தாங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும்.

எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களும் இதில் அடங்குவர். “எதிர்கால பொதுத் தேர்தல்களில் அவர்கள் போட்டியிட விரும்பவில்லை என்றால் அது அவர்களின் விருப்பமாகும். ஏனெனில் இனி ஓய்வூதியம் இருக்காது,” என்று அவர் கூறினார்.

ஓய்வூதியம் பெறாத திட்டத்தில் புதிய பணியாளர்களை நியமிக்கும் திட்டம், தற்போதுள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிலையை பாதிக்காது என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதத்தை அதன் திறனுக்கு ஏற்ப உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார். “இந்த விஷயத்தை தாமதப்படுத்த முடியாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here