கோலாலம்பூர்:
இன்று காலை 6 மணி நிலவரப்படி, திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேராக உள்ளது. இவர்கள் அனைவரும் டுங்கூனில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
ஜோகூர், கெடா, பகாங், பெர்லிஸ், சபா மற்றும் திரெங்கானுவில் உள்ள பல ஆறுகள் இன்னும் அபாய மட்டத்தில் உள்ளன என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான நட்மா தெரிவித்துள்ளது.
அவற்றுள் கோத்தா திங்கியில் உள்ள சுங்கை ஜோகூர் (ஜோகூர்), கோத்தா ஸ்டாரில் உள்ள சுங்கை கெடா (கெடா), பேரா மற்றும் கேமரூன் ஹைலேண்ட்ஸில் உள்ள சுங்கை பஹாங் மற்றும் ரொம்பினில் உள்ள சுங்கை ரோம்பின் (பஹாங்), சுங்கை அராவ் (பெர்லிஸ்), சுங்கை கினாபடங்கான் (சபா) மற்றும் உலு திரெங்கானுவில் உள்ள சுங்கை திரெங்கானு (தெரெங்கானு) ஆகிய ஆறுகள் அடங்கும்.
வெள்ளம், சேதமடைந்த பாலங்கள், இடிந்த சாலைகள் மற்றும் நிலச் சரிவுகள் காரணமாக 18 சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று நட்மா தெரிவித்துள்ளது.