கோலாலம்பூர்:
அம்பாங் மற்றும் புத்ரா ஹைட்ஸில் இருந்து பயணிக்கும் இலகு ரயில் போக்குவரத்து (LRT) பயணிகள் நாளை முதல் பிப்ரவரி 16 வரை மஸ்ஜிட் ஜமேக் நிலையத்திற்கு நேரடியாக தங்கள் பயணத்தைத் தொடரலாம்.
ரேபிட் ரெயில் நிறுவனத்தின் LRT தலைமை இயக்க அதிகாரி நோர் அஸ்மி முகமட் யூசோப் கூறுகையில், இந்த மாற்றம் மூலம் ரயில் பயணிகள் ஹேங் துவா எல்ஆர்டி நிலையத்தில் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதால், அவர்கள் மஸ்ஜிட் ஜமேக் LRT நிலையம் செல்லவேண்டுமாயின் இணைப்பு ரயிலில் ஏற வேண்டியதில்லை.
எவ்வாறாயினும், பயணிகள் மஸ்ஜிட் ஜமேக் மற்றும் பண்டாரயா நிலையங்களுக்கு இடையில் தங்கள் பயணத்தைத் தொடர இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.








