கோலாலம்பூரில் மனிதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை; தான்சானியா நாட்டவர் மீட்பு

புத்ராஜெயா:

கோலாலம்பூரில் மனித கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் தான்சானியா நாட்டவரை குடிநுழைவுத் துறை மீட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 29) மாலை 4.30 மணியளவில் தொடங்கிய நடவடிக்கையில் 29 வயதான பெண் மீட்கப்பட்டதாக அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

“கோலாலம்பூரில் உள்ள தான்சானிய தூதரகத்த்தின் தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் இன்று (ஜனவரி 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் மனித கடத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், பாலியல் நடவடிக்கைக்காக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் ரஸ்லின் கூறினார்.

தற்போது அந்தப் பெண் மீட்கப்பட்டு இடைக்காலப் பாதுகாப்பு ஆணையத்தின் (IPO) கீழ் இயங்கும் தங்குமிடத்தில் வைக்கப்பட்டார் என்றும் கூறிய அவர், இந்த வழக்கு அடிப்சம் சட்டம் 2007 (சட்டம் 670) கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here