வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பாட்டி, 4 வயது பேத்தி உயிரிழப்பு

ரானாவ்:

நேற்று இரவு, ரானாவிலுள்ள கம்போங் மாடானில் 60 வயது மூதாட்டியும் அவரது பேத்தியும் தீயில் சிக்கி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.

60 வயதான ஜாஃப்லன் சிகல் மற்றும் அவரது பேத்தி நான்கு வயது கார்லா என அடையாளம் காணப்பட்டது.

தீ விபத்து சம்பவத்தின் போது, ​​அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபருடன் வீட்டில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடியதாகவும் தெரிகிறது என்று ரானாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ரித்வான் முகமட் தைப் கூறினார்.

நேற்று இரவு 10.53 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே இயந்திரங்களுடன் கூடிய தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here