மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவரது துணைவியார் ராஜா சாரித் சோபியா ஆகியோர் மலேசியர்களுக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட பதிவில், சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மலேசியர்களிடையே அவர்களின் இனம், மதம் அல்லது கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ஒற்றுமையை மேலும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.