MAIWP புதிய தலைவராக சையட் கமாருல்ஜமான் சையட் காபீர் நியமனம்

பெட்டாலிங் ஜெயா:

கூட்டராசு பிரதேச இஸ்லாமிய மதக் கவுன்சிலின் (MAIWP) புதிய தலைவராக இஸ்லாமிய அறிவுஜீவியும் பொறியியலாளருமான சையட் கமாருல்ஜமான் சையட் காபீரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை MAIWP தலைவராகப் பதவிவகித்து வந்த டான்ஸ்ரீ தாவூட் பாக்கருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனம் நேற்று முதல் (பிப்ரவரி 15) அமலுக்கு வந்ததாகவும் செனட்டர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் தெரிவித்தார்.

இந்த நியமனம் மாட்சிமை தங்கிய பேரரசர், சுல்தான் இப்ராஹிம் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்ததாக நேற்று (பிப்ரவரி 15) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here