265-ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்

கோலாலம்பூர்:

இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெறும் மலாய் ஆட்சியாளர்களின் 265வது மாநாட்டில், மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்.

மலாய் ஆட்சியாளர்களின் கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்று, அவர் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் ஷரபுதீன் இத்ரிஸ் ஷா தலைமை தாங்குவார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here